/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அவசியம்
/
தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அவசியம்
ADDED : ஆக 19, 2025 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை அருகே தேவனுார்புதுாரில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை தாலுகா, பொள்ளாச்சி தாலுகா எல்லையில், உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவனுார்புதுார் கிராமம் உள்ளது. இரண்டு தாலுகாவிலிருந்தும் பஸ்கள் இங்கு செல்கின்றன. ஆனால், இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் பஸ் நிறுத்தம் மட்டும் உள்ளது. இதனால், பஸ்கள் நிறுத்த இடமில்லாமல் நெருக்கடி ஏற்படுகிறது. பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தேவனுார்புதுாரில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

