ADDED : ஆக 10, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ; உடுமலைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் தாராபுரம் ரோட்டுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சி அறிக்கை: உடுமலை நகர மையப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இன்று காலை முதல் மாலை வரை, தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலனி அருகில் பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படும்.
வெளியூர் மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும். பிற இடங்களில் இருந்து தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல அரசு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.