/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் தேவை
/
பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் தேவை
ADDED : மே 30, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி - தாராபுரம் ரோடும், உடுமலை செஞ்சேரிமலை ரோடும் சந்திக்கும் பகுதியில் பெதப்பம்பட்டி உள்ளது. இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், பஸ்கள், கார் போன்றவை செல்கின்றன.
பெதப்பம்பட்டி சந்திப்பில், பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க, குடிமங்கலம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.