/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை
/
ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை
ADDED : ஜூலை 02, 2025 09:53 PM

உடுமலை; உடுமலை எலையமுத்துார் பிரிவு பஸ் ஸ்டாபிலுள்ள, பயணியர் நிழற்கூரை பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
உடுமலை தளி ரோட்டில், எலையமுத்துார் பிரிவு பஸ் ஸ்டாப் பகுதியில், பயணியர் வசதிக்காக நிழற்கூரை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து பராமரிக்காததோடு, மழை நீர் செல்லும் ஓடை நீர் வழித்தடத்தின் மேல் கட்டப்பட்டுள்ளதால், செல்லும் வழித்தடம் சிதிலமடைந்தும், நிழற்கூரை கட்டடம் பராமரிப்பின்றி, சேதமடைந்தும், ஓடை பகுதி முழுவதும் புதர் மண்டியும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
அரசுக்கல்லுாரி, கோட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்து துறை அலுவலகம், அரசு மாணவ, மாணவியர் விடுதி, தனியார் பள்ளிகள் அமைந்துள்ள நிலையில், ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் இந்த பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
மூன்று ரோடு சந்திப்பு பகுதியில், ரோட்டின் மத்தியில் ஆபத்தான நிலையில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். வெயில், மழையிலும் மக்கள் காத்திருக்கும் நிலைக்கு தீர்வு காண, பஸ் ஸ்டாப் நிழற்கூரையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், புதிதாக அமைக்க வேண்டும்.