/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள் பஸ், ரயில்களில் கூட்ட நெரிசல்
/
விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள் பஸ், ரயில்களில் கூட்ட நெரிசல்
விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள் பஸ், ரயில்களில் கூட்ட நெரிசல்
விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள் பஸ், ரயில்களில் கூட்ட நெரிசல்
ADDED : அக் 21, 2025 10:35 PM

- நிருபர் குழு -: தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த மக்கள், மீண்டும் அவரவர் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பினர். இதனால், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகை கடந்த திங்கள் கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நான்கு நாட்கள் வரை, விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர் விடுமுறையால், பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில், பணிபுரியும் மக்கள், சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு வந்திருந்தனர்.
நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில், அவரவர், மீண்டும் அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டில் வழக்கத்துக்கு மாறாக பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
குறிப்பாக, பல்லடம் மார்க்கமாக கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு செல்லும் பஸ்களில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பயணிகள் பலரும் இருக்கைகளை பிடிக்க, முண்டியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறினர்.
அதேபோல, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்ப வசதியாக, பழநி மார்க்கமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன.
அந்த பஸ்கள், பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தபோது, பயணிகள் கூட்டம் நிறைந்தே காணப்பட்டதால், பலரும் நின்று கொண்டே பயணிக்க முற்பட்டனர்.
இதேபோல, பெங்களூரு, திருச்சி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் மக்கள் ஏற்கனவே முன்பதிவு செய்து பஸ்சுக்காக காத்திருந்து பயணித்தனர்.
உடுமலை விடுமுறை முடிந்து ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வதால், உடுமலை பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் நெரிசல் அதிகரித்தது.
இதனால், உடுமலை பஸ் ஸ்டாண்டில், கோவை, திண்டுக்கல், மதுரை மற்றும் திருப்பூர் செல்லும் பஸ்களில் கூட்டம் அபரிமிதமாக காணப்பட்டது. அதே போல், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களிலும் அதிகளவு கூட்டம் காணப்பட்டது.
மேலும், உடுமலை வழியாக, கோவை, திண்டுக்கல், சென்னை, பாலக்காடு செல்லும் ரயில்களில், ஏற ஆயிரக்கணக்கான பயணியர் வந்ததால், உடுமலை ரயில்வே ஸ்டேஷனிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.