/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் விதிமீறல்! போலீசார் கண்காணிப்பது அவசியம்
/
மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் விதிமீறல்! போலீசார் கண்காணிப்பது அவசியம்
மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் விதிமீறல்! போலீசார் கண்காணிப்பது அவசியம்
மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் விதிமீறல்! போலீசார் கண்காணிப்பது அவசியம்
ADDED : மார் 07, 2026 05:39 AM

திருப்பூர்: மத்திய பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள ரோட்டில், விதிகளை மீறி பஸ்களும், பிற வாகனங்களும் தாறுமாறாக செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெரிசலை தவிர்க்க, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் முன் உயர்மட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தின் கீழ் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைய, வெளியேற தனித்தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் கண்டுகொள்ளாததால், பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தாறுமாறாக போக்குவரத்து விதிமீறி இயக்கப்படுகிறது. இதனால், விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது.
கோவை, பொள்ளாச்சி, உடுமலை, சேலம், ஈரோடு செல்லும் பஸ்களும், திருப்பூரில் இருந்து மூன்று பஸ் ஸ்டாண்ட்களில் அதிகளவில் டவுன் பஸ்கள் வந்து, செல்லும் பஸ் ஸ்டாண்ட்டாகவும் இது உள்ளது.
அனைத்து பஸ்களும் தெற்கு புறம் உள்ள நுழைவு வாயில் வழியாக வந்து, பஸ் ஸ்டாண்டுக்குள் வரவும், வடக்கு புறம் உள்ள நுழைவு வாயில் வழியாக வெளியே செல்லவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். காமராஜ் ரோடு உயர்மட்ட பாலத்தின் கீழ் பஸ்கள் இடதுபுறம் திரும்பி பஸ் ஸ்டாண்ட் செல்லக்கூடாது.
புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டும் இடம் எதிரே உள்ள ரவுண்டானா சென்று சுற்றி அதன் பின் பஸ் ஸ்டாண்டுக்கு வர வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
'மினி' பஸ்களால்'மெகா' தொல்லை ஆனால், போக்குவரத்து விதிகளை பஸ்கள் உட்பட, கனரக வாகனங்கள் டிரைவர்கள் முழுமையாக கடைபிடிப்பதில்லை. பாலத்தின் கீழ் கிடைக்கும் வழிகளில் எல்லாம், தனியார் பஸ்கள், மினி பஸ்கள், சில நேரங்களில் அரசு பஸ்கள் 'திடீரென்று நுழைந்து விடுகிறது. பெரிய வாகனங்கள் ஒருவழிப்பாதையில் முன்னேறுவதால், அடுத்தடுத்து டூவீலர் ஓட்டி வருபவர்கள் நிலைகுலைகின்றனர்.
பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல பயத்துடன் காத்திருக்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் முன்புறம், சுரங்க நுழைவு பாதை அருகே போலீஸ் அவுட் ஸ்டேஷன் உள்ளது. அவ்வப்போது, பாலத்தின் கீழ் டூவீலர் பரிசோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் விதிமீறலை கண்டுகொள்ளவதில்லை.
காமராஜர் ரோட்டில் ஒரு வழிப்பாதையில் முன்னேறி வரும் வாகனங்கள் தினசரி மார்க்கெட் வீதியில் இருந்து மெயின் ரோட்டுக்கு வருவோர் கலக்கமடைகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வயதானவர், குழந்தைகளுடன் வரும் பெண்கள் சாலையை கடப்பது பெரும் சிரமமாக உள்ளது; அடிக்கடி சிறுவிபத்துகளும் நேரிடுகிறது.
பாலத்தின் கீழ் பஸ்கள் நேருக்குநேர் வருவதை தவிர்க்கவும், வேகத்தை கட்டுப்படுத்தவும் 'பேரிகார்டு' வைக்க வேண்டும். போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

