/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்கள்
/
பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்கள்
ADDED : டிச 25, 2024 09:53 PM

உடுமலை; மடத்துக்குளத்தில், பழநி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் 'மப்சல்' பஸ்களும், தாராபுரம், உடுமலை, கொமரலிங்கம் வழித்தடத்தில் டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
கோவை, பழநி செல்லும், 150க்கும் மேற்பட்ட பஸ்கள் மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல், ரோட்டிலேயே நிறுத்தி, பயணியரை இறக்கி, ஏற்றி செல்கின்றன.
ஐந்து நிமிடத்திற்கு ஒரு மப்சல் பஸ் என்ற அடிப்படையில், பஸ்கள் வந்து செல்லும் நிலையில், ரோட்டின் இரு புறமும் பஸ்களை நிறுத்துவதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது.
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நீண்ட துாரம் காத்திருக்கும் நிலையில், பஸ்கள் ஏற வரும் பயணியர் பாதிக்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டிற்குள், அனைத்து பஸ்களும் வந்து செல்லாததால், வெறிச்சோடி காணப்படுகிறது. மப்சல் பஸ்களில் ஏறும் பயணியர், ரோட்டோரத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடைகள், ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதால், பயணியர் அமர இருக்கை இன்றி, ரோட்டில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து பஸ்களும், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வர, போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.