/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிற்காமல் சென்ற பஸ்கள்; சிறைபிடித்த பொதுமக்கள்!
/
நிற்காமல் சென்ற பஸ்கள்; சிறைபிடித்த பொதுமக்கள்!
ADDED : நவ 30, 2024 04:42 AM
பல்லடம: பல்லடம், கே.என்.புரம் சுற்றுவட்டார பகுதியில் வசிப்போர், கோவை -- திருப்பூருக்கு செல்லும் முக்கிய வழித்தடம் என்பதால், இப்பகுதியில் இருந்து, அரசு தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலரும், இங்கிருந்து தான் பஸ்சில் பயணிப்பர்.
இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் நிலையில், கே.என்.புரம் ஸ்டாப்பில், தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை என, குற்றம் சாட்டிலுள்ள இப்பகுதி பொதுமக்கள், நேற்று காலை, கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்த அனைத்து தனியார் பஸ்களையும் அடுத்தடுத்து சிறை பிடித்தனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'தொழில், வேலை காரணமாக, ஏராளமானோர் இங்கிருந்து தினசரி கோவை, பல்லடம், திருப்பூர் சென்று வருகின்றனர். அதிகளவு தனியார் பஸ்களை பயன்படுத்தி வரும் நிலையில், இங்கு ஸ்டாப்பிங் இல்லை என்றும், நிறுத்த முடியாது எனவும் கூறுகின்றனர். இதனால், தினமும், பஸ் கிடைக்காமல் கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. இது குறித்து பஸ் நடத்துனர் ஓட்டுனர் இடம் தெரியப்படுத்தியும், நிற்காமல் சென்றதால் பஸ்களை சிறைப் பிடித்தோம்,' என்றனர்.
முன்னதாக, தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், பஸ் நடத்துனர், ஓட்டுனரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதனால், பஸ்சை மக்கள் விடுவித்து கலைந்து சென்றனர்.