/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்ணபுரத்தில் கோலாகலம் மாட்டுச்சந்தை இன்று துவக்கம்
/
கண்ணபுரத்தில் கோலாகலம் மாட்டுச்சந்தை இன்று துவக்கம்
கண்ணபுரத்தில் கோலாகலம் மாட்டுச்சந்தை இன்று துவக்கம்
கண்ணபுரத்தில் கோலாகலம் மாட்டுச்சந்தை இன்று துவக்கம்
ADDED : ஏப் 26, 2025 11:02 PM
காங்கயம்: காங்கயம், ஓலப்பாளையம், கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இங்குள்ள விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு இன்று துவங்கி, பத்து நாட்கள் மாட்டுச்சந்தை நடக்க உள்ளது. திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம், பொள்ளாச்சி, கோபி, ஈரோடு உட்பட பல பகுதிகளில் இருந்து காளைகள், எருதுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
விவசாயிகள் கூறியதாவது:
மாட்டுச்சந்தை மே 7ம் தேதி வரை நடக்கிறது. சந்தையில் காளை கன்றுகள், ரேக்ளாரேஸ் காளைகள், வண்டி காளைகள் மற்றும் எருதுகள், காங்கயம் ரக பால் மாடுகள் விற்பனைக்கு வர உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்தாண்டு, 20 ஆயிரம் மாடுகள் வரை எதிர்பார்க்கிறோம். பல இடங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். இங்கு பாரம்பரிய முறையில் விலை பேசப்பட்டு வாங்கப்படுவது வழக்கம். கோடை வெயில் அதிகம் உள்ளதால், வாரக்கணக்கில் நடக்கும் சந்தையில் மாடுகளுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.