/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாந்தி வித்யாலயாவில் பட்டாம்பூச்சி பூங்கா
/
சாந்தி வித்யாலயாவில் பட்டாம்பூச்சி பூங்கா
ADDED : மார் 15, 2025 11:52 PM

அவிநாசி:அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள சாந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டாம்பூச்சிகள் பற்றி தேசிய அறிதல் தினம் மற்றும் பட்டாம்பூச்சிகள் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ரோட்டரி செயல் குழுவின் மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில், இன்ட்ராக்ட் கிளப் தலைவர் சிந்துஜா வரவேற்றார். ரோட்டரி நிர்வாகி விசித்ரா, இயற்கை கழக தலைவர் ஆகியோர் பட்டாம்பூச்சிகள் குறித்து பேசினர்.
பூச்செடிகளும், பட்டாம்பூச்சிகளுக்கான இனப்பெருக்க மகரந்த சேர்க்கை செடிகளும் நடப்பட்டு பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமுருகன்பூண்டி ரோட்டரி நிர்வாகி சக்ரபாணி விழாவை ஒருங்கிணைத்தார். முன்னதாக, பள்ளித் தாளாளர் ரேணுகாதேவி வரவேற்றார். விழாவில், திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.