/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'புறவழிச்சாலை திட்டம்; பொதுமக்கள் குழப்பம்'
/
'புறவழிச்சாலை திட்டம்; பொதுமக்கள் குழப்பம்'
ADDED : ஆக 13, 2025 10:41 PM

பல்லடம்; பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள், மாவட்ட தலைவர் சீனிவாசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின், அவர்கள் கூறியதாவது:
பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், கரூர்- - கோவை இடையிலான பசுமைவழிச் சாலை திட்டம், கடந்த, 2017ம் ஆண்டே திட்டமிடப்பட்டு, நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன. கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மதிப்பு இன்று வரை பூஜ்ஜியமாக உள்ள நிலையில், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நில உரிமையாளர்கள், விற்பனை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். தடையின்மை சான்று பெற, சேலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்துக்கு தான் செல்ல வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, மாநில நெ டுஞ்சாலைத்துறை சார்பில், பல்லடம் - - தாராபுரம் ரோட்டுடன், செட்டிபாளையம் ரோட்டை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதற்காகவும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, இவையும் பூஜ்ஜிய மதிப்பாக உள்ளன. பசுமைவழிச் சாலை செயல்படுத்தப்பட்டால், புறவழிச்சாலை பயன்பாடற்றுப் போகும் வாய்ப்பு உள்ளது. மாநில அரசின் புறவழிச் சாலை திட்டம், யாரோ சிலருக்கு பயன்படுவதற்காகவே அவசர கதியில் அமைக்கப்பட்டு வருவதாக சந்தேகம் உள்ளது. குழப்பத்தை ஏற்படுத்தி வரும் புறவழிச்சாலை திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.