/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலையடிவார கிராமங்களில் குரங்குகளுக்கு கூண்டு வைப்பு
/
மலையடிவார கிராமங்களில் குரங்குகளுக்கு கூண்டு வைப்பு
மலையடிவார கிராமங்களில் குரங்குகளுக்கு கூண்டு வைப்பு
மலையடிவார கிராமங்களில் குரங்குகளுக்கு கூண்டு வைப்பு
ADDED : நவ 06, 2024 10:24 PM

உடுமலை; உடுமலை மலையடிவார பகுதிகளில், வனத்துறை சார்பில் குரங்குகளை பிடிக்க, கூண்டு வைக்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகம்,மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களான, தேவனுார் புதுார், கரட்டூர், ராவணாபுரம், பொன்னாலம்மன் சோலை, திருமூர்த்திநகர், வலையபாளையம் உள்ளிட்ட கிராமங்களில், நுாற்றுக்கணக்கான குரங்குகள் நுழைந்துள்ளன.
அவை தென்னை மரங்களில் காய்களை சேதப்படுத்தி வரு வதோடு,மா, பலா, வாழை உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்துகிறது. இவற்றை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ஒரு ஆண்டாக வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை.
இதனால், ஆவேசமடைந்த உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் மலையடிவார கிராம விவசாயிகள், நேற்று முன்தினம் மாவட்ட வன அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தை அடிப்படையில், நேற்று ராவணாபுரம், வரப்பள்ளம், விவசாயி திருமலைசாமிக்கு சொந்தமான தென்னந்தோப்பில், குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில், கூண்டு வைக்கப்பட்டது.
தொடர்ந்து, குரங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில், கூண்டு வைத்து, குரங்குளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.