ADDED : மார் 17, 2026 07:35 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் ராயபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
ப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் த.வெ.க. தினசரி காலண்டர் இருந்தது. கட்சி அலுவலகத்தில் வைத்திருந்த காலண்டரை கொண்டு செல்வதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இருப்பினும், கட்சி கொடி சின்னம், தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் படம் அச்சிட்டிருந்த 124 காலண்டரை பறக்கும் படை அலுவலர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் ராமர், கோபிநாத் உள்ளிட்டோர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட காலண்டர்கள் தெற்கு தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
