/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெரு நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி படுகாயம்
/
தெரு நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி படுகாயம்
ADDED : டிச 03, 2025 06:25 AM
பல்லடம்: ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, உட்பட்ட பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுந்தராம்பாள் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்று, நேற்று மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது.
அப்போது, சில தெருநாய்கள், கன்றுக்குட்டியை கடித்தன. சத்தம் கேட்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள், நாய்களை விரட்டிய விவசாயிகள் சிகிச்சைக்காக கால்நடை மருந்தகத்துக்கு எடுத்துச் சென்றனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'ஆறுமுத்தாம்பாளையத்தில், ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளுடன் இறைச்சி, கோழி, மீன் உள்ளிட்ட கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இவற்றை உண்ண தெருநாய்கள் குப்பை கிடங்கிலேயே தஞ்சமடைந்து கிடக்கின்றன. அதில், உணவு கிடைக்காத போது, ஆடு, மாடுகளை கடிக்கின்றன. கடந்த சில நாட்களில், ஏராளமான கோழிகள், ஆடுகள் பலியாகி விட்டன.
சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்,' என்றனர்.

