ADDED : பிப் 05, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சக் ஷம், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி, செஞ்சிலுவை சங்கம் ஆகியன சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீடு முகாம் திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, ஏ.பி.ஏ., காலனியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தில், நாளை(6ம் தேதி) மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது.
புகைப்படம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கவேண்டும். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, இலவச செயற்கை கால் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு: 94422 25500.

