/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்களுக்கான அழகு கலை விண்ணப்பிக்க அழைப்பு
/
ஆண்களுக்கான அழகு கலை விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 25, 2025 12:11 AM
திருப்பூர்; திருப்பூர் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் சதீஸ்குமார் அறிக்கை:
பயிற்சி மையத்தில் ஆண்களுக்கான அழகு கலை பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. முப்பது நாள் நடைபெறும் இப்பயிற்சி முற்றிலும் இலவசம். வரும், 28 ம் தேதி இதற்கான நேர்காணல் நடத்தி பயிற்சி மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.
பயிற்சியில் சேர எழுதப் படிக்கத் தெரிந்த, 18 - 45 வயதுக்குட்பட்ட, ஆண், பெண் இரு பாலரும் தகுதியானவர்கள். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது. காலை- மற்றும் மாலை தேநீர் மற்றும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு, 94890 - 43923, 90804 - 42586, 99525 - 18441 எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.