/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
/
முதல்வர் திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 08, 2024 02:48 AM
திருப்பூர்: தமிழக முதல்வரின் திறனாய்வுத் தேர்வு, 2025, ஜன., 25 ம் தேதி நடக்கிறது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.
முதல் தாளில் கணிதம் தொடர்பாக, 60 வினாக்களும், இரண்டாம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்பாக, 60 வினாக்களும் இடம் பெறும். ஒரே நாளில் காலை, 10:00 முதல், 12:00 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம், 2:00 முதல், 4:00 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்படும். நடப்பு கல்வியாண்டு, அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தலா 500 மாணவர், மாணவியர் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர்.
இவர்களுக்கு மாதம், ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு கல்வி ஆண்டில், 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் தேர்வுக்கான விண்ணப்பத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, 50 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி, பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.