/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 30, 2025 08:15 PM
உடுமலை; தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தமிழ் ஆர்வலரை தேர்வு செய்து, ஆண்டுதோறும் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டுவருகிறது. நடப்பு ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
www.tamilvalarchithurai.tn.gov.in என்கிற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், சான்றுகளுடன், திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்துக்கு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் நேரிலோ, தபால் வாயிலாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங் களுக்கு, 0421 2971183 என்கிற எண்ணில் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

