/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைப்பொழிவு குறைவால் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
/
மழைப்பொழிவு குறைவால் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : நவ 05, 2025 08:11 PM
உடுமலை: மழைப்பொழிவு குறைவாக இருப்பதால், நடப்பு சீசனில் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என உடுமலை வட்டார வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அத்துறையினர் அறிக்கை: நடப்பு சீசனில் மழைப்பொழிவு குறைவாக தென்படுகிறது. எனவே, பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும்.
சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புக், ஆதார் அட்டை நகலுடன் அருகிலுள்ள இ-சேவை மையத்தில், காப்பீடு செய்யலாம்.
அக்., ல் விதைத்த நெற்பயிர்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 578 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்யலாம்; நவ., 15 கடைசி நாளாகும்.
சோளம், ஒரு ஏக்கர் 55 ரூபாய், டிச., 16 கடைசிநாள், மக்காச்சோளம் ஏக்கருக்கு, 545 ரூபாய், நவ., 30 கடைசிநாள்; கொண்டைக்கடலை ஏக்கருக்கு, 254 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். நவ., 30 காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

