/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் ராணுவத்தினர்சான்று பெற அழைப்பு
/
முன்னாள் ராணுவத்தினர்சான்று பெற அழைப்பு
ADDED : மே 16, 2025 12:31 AM
திருப்பூர், ; கல்லுாரியில் அட்மிஷன் பெற, 'முன்னாள் ராணுவத்தினர் - குடும்பம் சார்ந்தோர்' சான்றிதழ் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும் கல்லுாரி படிப்புகளில் சேரும் முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தைச் சார்ந்தோருக்கு அதற்குரிய சான்றிதழ் வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டுக்கான இந்த சான்றிதழை, முன்னாள் படை வீரர் நல அலுவலக, உதவி இயக்குநரிடம் விண்ணப்பித்து பெற்று உரிய கல்லுாரி சேர்க்கைக்கு பயன்படுத்தலாம்.
கல்லுாரி விண்ணப்பம்; 10 மற்றும் 12ம் வகுப்பு மார்க் ஷீட்; பள்ளி மாற்றுச்சான்றிதழ்; ஜாதிச்சான்றிதழ்; சார்ந்தோர் ஆதார் அட்டை; முன்னாள் ராணுவத்தினர் அடையாள அட்டை, படை விலகல் சான்றிதழ் ஆகியன சமர்ப்பிக்க வேண்டும்.
நேரில் விண்ணப்பிக்க இயலாதோர் https://exwel.tn.gov.in இணைய தளம் வாயிலாக இ மெயில் முகவரியுடன் விண்ணப்பித்து உரிய சான்றிதழ் பெறலாம்.
முன்னாள் ராணுவத்தினருக்கான சலுகை பெற கட்டாயம் இந்த சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். ஒரு படிப்புக்கு பெறப்பட்ட சான்றிதழ் அதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினர் இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகத்தை, 0421 297 1127 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.