UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 10:58 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், வரும் 21-ம் தேதி முதல் சிசிடிவி கேமரா, தீ எச்சரிக்கை அலாரம், புகை எச்சரிக்கை கருவிகள் அமைத்தல், பழுது பார்த்தல் குறித்த 13 நாள் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
18 முதல் 45 வயதுக்குட்பட்ட, எழுதப் படிக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 94890 43923, 99525 18441.
