ADDED : பிப் 26, 2026 05:56 AM
அ நிறம் | அளவு
உடுமலை: தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க, உடுமலை வட்டார வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அத்துறையினர் கூறியதாவது: உடுமலை வட்டாரத்தில், 2 ஆயிரம் விவசாயிகள், தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர். பதிவு செய்யாதவர்களுக்கு வேளாண்துறை வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்.
அவ்விவசாயிகள், நிலத்தின் சிட்டா, வங்கி கணக்கு பாஸ் புக், மொபைல்போன் எடுத்து சென்று, இ-சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தனித்துவ அடையாள எண் இல்லாவிட்டால், அரசின் மானிய திட்டங்கள் பெற முடியாது.
இவ்வாறு, வேளாண்துறையினர் தெரிவித்தனர். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
