UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 05:36 PM
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:
கிறிஸ்தவர்கள் 550 பேருக்கு தலா ரூ.37 ஆயிரமும், கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது.
புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும், www.bcmbcw.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து, 2027 ஜன.1-ம் தேதிக்குள், ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
