/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வமத தொடர் பிரார்த்தனை பொதுமக்களுக்கு அழைப்பு
/
சர்வமத தொடர் பிரார்த்தனை பொதுமக்களுக்கு அழைப்பு
ADDED : செப் 22, 2024 05:47 AM
திருப்பூர் : உலக அமைதிக்கான சர்வ மத தொடர் பிரார்த்தனை இன்று காலை முதல் மாலை வரை, ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், ஸ்ரீராம்சந்த்ரா மிஷன் யோகாஸ்ரமம், ஹார்ட்புல்னெஸ் தியான மையத்தில் இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை தொடர் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மனிதர்கள் தங்களுக்குள் அன்பு செலுத்தி, நன்னெறியுடன் வாழ வேண்டும். கருத்து வேறுபாடு இல்லாத மனிதர்கள், நாடுகள் என உலக அளவில் அமைதி மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சர்வ மத பிரார்த்தனை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் மாலை வரை ஏதாவது ஒரு நேரத்தில் தங்கள் வசதிக்கேற்ப பங்கேற்கலாம்.
விவரங்களுக்கு, 98422 96093, 98430 57295 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஹார்ட்புல்னெஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.