தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குப்பை கொட்டுவதை கண்டறிய ‘கேமரா’

குப்பை கொட்டுவதை கண்டறிய ‘கேமரா’

குப்பை கொட்டுவதை கண்டறிய ‘கேமரா’


ADDED : ஆக 24, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருமாநல்லுார், ஆக. 25–

பெருமாநல்லுார் ஊராட்சி பகுதியில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குப்பைகளை துாய்மை பணியாளர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், சிலர் முக்கிய சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி, அவற்றுக்கு தீ வைப்பதால், வெளியேறும் கரும்புகையால் குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை தடுக்கவும், விதிமீறி குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குப்பை கொட்டப்படும் இடங்களில் பச்சை துணி கட்டி, ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், பொது இடங்களில் குப்பை கொட்டுவது தவிர்க்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

–– சர்வீஸ் ரோட்டில் பொருத்தப்பட்ட கேமரா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us