sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிரசாரம் செலவு விலை பட்டியல் அரசியல் கட்சியினருக்கு 'ஷாக்'

/

பிரசாரம் செலவு விலை பட்டியல் அரசியல் கட்சியினருக்கு 'ஷாக்'

பிரசாரம் செலவு விலை பட்டியல் அரசியல் கட்சியினருக்கு 'ஷாக்'

பிரசாரம் செலவு விலை பட்டியல் அரசியல் கட்சியினருக்கு 'ஷாக்'


ADDED : மார் 20, 2026 04:05 PM

Google News

ADDED : மார் 20, 2026 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவினர் தயாரித்த பிரசார வாகனம், மைக் செட் தொடர்பான விலை பட்டியலை பார்த்த அரசியல் கட்சியினர், அதிர்ச்சி அடைந்தனர். நடைமுறை கட்டணத்தைவிட அதிகமாக உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டசபை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். தேர்தல் செலவினங்களை கணக்கிடுவற்கான விலை பட்டியல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் பிரிவினர் தயாரித்த விலை பட்டியல் விவரங்கள், பவர்பாய்ன்ட் வாயிலாக, ஸ்கிரீனில் ஒளிபரப்பப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:

பிரசார வாகனம் - 2000

ஆம்பிளிபயர் - 220

ஸ்பீக்கர் - 600

ேஹண்ட் மைக் - 100

ஸ்டாண்ட் மைக் - 150

மைக் - 100

சீரியல் செட் - 80

டியூப் லைட் - 20

ஏர்கூலர் - 300

ஜெனரேட்டர்

-------------

3 கே.வி.ஏ. - 500

6 கே.வி.ஏ. - 600

10 கே.வி.ஏ. - 700

62.5 கே.வி.ஏ. - 1,797

125 கே.வி.ஏ. - 3,709

ஏ பேனல் போர்டு - 872

இந்த பட்டியலை பார்த்த அரசியல் கட்சியினர் ஷாக் ஆகினர். 'பிரசார வாகனம் தனியாகவும், மைக், ஸ்பீக்கர் தனியாகவும் வாடகைக்கு எடுப்பதில்லை. ஒரு பிரசார வாகனத்தில், ஒரு ஆம்ப்ளிபையர், ஒரு மைக், 4 ஸ்பீக்கர், 2 டியூப்லைட், ஒரு போகஸ் லைட்; ஒரு மைக்; 3 கிலோவாட் ஜெனரேட்டர் ஆகியவை இருக்கும். இவை அனைத்தையும் சேர்த்துதான் ஒருநாள் வாடகை, 1,500 ரூபாய்.

ஆனால், தேர்தல் பிரிவினர், பிரசார வாகனத்துக்கு மட்டும் நாளொன்றுக்கு, 2 ஆயிரம் ரூபாயாக விலை நிர்ணயம் செய்துள்ளனர். இதுதவிர, ஸ்டாண்ட் மைக், ேஹண்ட் மைக் என தனித்தனி வாடகை நிர்ணயித்துள்ளனர். ஆனால், நடைமுறையில் அனைத்திற்கும் ஒரே வாடகைதான். ஸ்பீக்கருக்கு, 150 ரூபாய்க்கு மேல் வாடகை வாங்குவதில்லை; ஆனால், விலை பட்டியலில், 600 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில், அரசியல் கட்சியினருக்கு விலை பட்டியல் நகலை கொடுங்கள். கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்கள் அதனடிப்படையில், விலை பட்டியலை இறுதி செய்யுங்கள்' என, அனைத்து கட்சியினரும் ஒருசேர தெரிவித்தனர். முதல் ஸ்லைடிலேயே ஆட்சேபணை கிளம்பியதால், உணவு விலை பட்டியல் உள்ளிட்ட அடுத்தடுத்த பொருட்களில் விலை பட்டியல் விவரங்களை காட்சிப்படுத்தாமல், அதிகாரிகள், 'டக்' என்று கூட்டத்தை முடித்துக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us