
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் நகராட்சிக்குட்பட்ட, 18 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
அத்திக்கடவு மற்றும் பில்லுார் கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது குடிநீர் குழாய்களில் பெரும்பாலானவை சேதமடைந்து காணப்படுகின்றன. துருப்பிடித்த குழாய்கள், உடைந்த 'டேப்'கள் என, சேதம் அடைந்த உபகரணங்களால், குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய திட்டமிட வேண்டியது அவசியம். எனவே, சேதமடைந்த குழாய், 'டேப்'களை மாற்றி அமைக்க வேண்டும்.