ADDED : ஜன 21, 2025 06:56 AM

திருப்பூர்; நல்லுார், வி.ஜி.வி., கார்டன் கிழக்கு, ஹர்சன் கார்டன்ஸ், மேபிளவர் கார்டன் மற்றும் சுபத்ரா கார்டன் பகுதி பொதுமக்கள் நேற்று திருப்பூர் மாநகராட்சி, 3வது மண்டல உதவி கமிஷனரிடம் அளித்த மனு:
எங்கள் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் பயன்படுத்தும் பொது வழித்தடம், க.ச.,எண் 108 பகுதியில் அமைந்துள்ளது. இவ்வழியாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட லே அவுட் உரிமையாளர் இந்த வழித்தடத்தை மறித்து கேட் அமைத்துள்ளார்.
இதனால், இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கும் அவதிக்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை ஆய்வு செய்து, அங்கு பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள கேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.