ADDED : ஜன 04, 2024 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: அலகுமலை மீது பெய்யும் மழை நீர் வழிந்தோடி கைலாசநாதர் கோவில் குளத்திற்கு வர வசதியாக அடிவாரத்தில் தரைப்பாலம் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன் அப்பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அதிகளவு வெட்டி எடுத்துச் செல்லப்பட்டதில் பாலம் சேதம் அடைந்தது. இதனால், அலகுமலை அடிவாரத்தில் இருந்து அலகுமலை வித்யாலயா மெட்ரிக் பள்ளி வரை செல்லும் ரோட்டில் போக்குவரத்து முடங்கியது.
இனி பாலம் கட்டுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஊராட்சி சார்பில் உடைந்த பாலத்திற்கு மண் கொட்டப்பட்டது. இதனால், பாலம் புதை குழியாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, தைப்பூச திருவிழாவுக்கு முன் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.