/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கம்பங்களை மாற்றாமல் கால்வாய் கட்டலாமா?
/
கம்பங்களை மாற்றாமல் கால்வாய் கட்டலாமா?
ADDED : பிப் 04, 2025 07:38 AM

இது சரியா?
சாமுண்டிபுரம், இரண்டாவது வீதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. நடுவேயுள்ள கம்பங்களை இடம் மாற்றாமல் பணி மேற்கொள்ளப்படுகிறது.- ரவிக்குமார், சாமுண்டிபுரம். (படம் உண்டு)
குப்பை தேக்கம்
பல்லடம், சித்தம்பலம், எஸ்.ஏ.பி., சேரன் மாநகர் குடியிருப்பில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும்.
- அங்குராஜ், சித்தம்பலம். (படம் உண்டு)தண்ணீர் வீண்அங்கேரிபாளையம், வேஸ்ட் குடோன் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- டேவிட், அங்கேரிபாளையம். (படம் உண்டு)
இங்கா வீசுவது?
குன்னத்துார் குளம் துார்வாரும் பணியின் போது, அதிகமாக மதுபாட்டில்கள் கிடைத்துள்ளது. நீர் நிலைகளில் மதுபாட்டில்கள் வீசியெறிய வேண்டாம் என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.- முருகேசன், குன்னத்துார். (படம் உண்டு)
அகற்றினால் அழகு
சூசையாபுரம் இரண்டாவது வீதியில் குடிநீர் தொட்டியை ஒட்டி, செடிகள் முளைத்துள்ளது. செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.- வின்சென்ட்ராஜ், சூசையாபுரம். (படம் உண்டு)
கழிவுநீர் தேக்கம்
அரசு மருத்துவக் கல்லுாரி முன் பஸ் ஸ்டாப்பில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பயணிகளுக்கு சிரமமாக உள்ளது.
- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)
பல்லாங்குழி சாலை
நஞ்சப்பா ஸ்கூல் வீதி, காதர்பேட்டை பள்ளி முன் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
குழியை மூடி சாலையை சரிசெய்ய வேண்டும்.- சத்ரியன், காதர்பேட்டை. (படம் உண்டு)ரியாக் ஷன்குழாய் உடைப்பு
திருப்பூர், ராம் நகர் முதல் வீதி, சாய் ஸ்கூல் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணானதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி மூலம் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு விட்டது.- செந்தில்குமார், ராம் நகர். (படம் உண்டு)தெருவிளக்கு எரிகிறதுதிருப்பூர், கோல்டன் நகர், பெருமாள் நகர் முதல் வீதியில் தெருவிளக்கு எரியாமல் இருப்பதாக, செய்தி வெளியிடப்பட்டது. தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு தற்போது எரிகிறது.- ராஜேந்திரன், பெருமாள் நகர். (படம் உண்டு)தாராபுரம், சக்தி லாட்ஜ் பின்புற வீதியில் தெருவிளக்கு எரியாததது குறித்து செய்தி வெளியானது. நகராட்சி மூலம் தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு விட்டது.- தங்கமுத்து, தாராபுரம். (படம் உண்டு)

