/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நவீன தொழில்நுட்பத்தில் முருங்கை வளர்க்கலாமே!
/
நவீன தொழில்நுட்பத்தில் முருங்கை வளர்க்கலாமே!
ADDED : டிச 23, 2024 04:54 AM
உடுமலை : மழை, வெயில் படாமல் முருங்கையை வளர்க்க முடிந்தால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய வருமானத்தை அள்ளித்தரும். அதற்கு பசுமை குடில் போன்ற அமைப்புகளை நிறுவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
முருங்கை விளைய நல்ல வெப்பம் தேவை. அதிக மழைப்பொழிவு இருக்கும் காலங்களில் முருங்கை விளைச்சல் இருக்காது.
இந்த ஆண்டு பருவமழை துவங்கியதிலிருந்து, முருங்கை பூக்கள் மொத்தமாக உதிர்ந்து விட்டது. இதனால், காய்கள் இன்றி வெற்று மரங்களாக காட்சி அளிக்கிறது. மொத்த விளைச்சலில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உற்பத்தி இல்லை.
இதனால், முருங்கை விலை உச்சத்தை தொட்டுள்ளது. சந்தையில் ஒரு காய், 25 ரூபாய் வரை விலை போகிறது. சீசன் காலத்தில் ரூபாய்க்கு நான்கு காய் கிடைக்கிறது.
இன்றைய நவீன உலகில் மழை, வெயில் படாமல் முருங்கையை வளர்க்க முடிந்தால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய வருமானத்தை அள்ளித் தரும். அதற்கு பசுமை குடில் போன்ற அமைப்புகளை நிறுவ வேண்டும்.
இதற்கு ஏராளமான பொருட்செலவு செய்ய வேண்டி இருக்கும். இது சாதாரண விவசாயிகளால் முடியாது.
இன்றைய நிலையில் சாதாரண மனிதர்களால் முருங்கைக்காய் வாங்க இயலாது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, அரசு இதில் பெரிய அளவில் முதலீடு செய்து உற்பத்தியை பெருக்கலாம்.
அவ்வாறு செய்யும் பொழுது மழைக்காலத்திலும் முருங்கை அறுவடையை எளிதாக செய்ய முடியும். இதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

