/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்வாய் கட்டுமான பணி தாமதம்; பொதுமக்கள் - வணிகர்கள் பாதிப்பு
/
கால்வாய் கட்டுமான பணி தாமதம்; பொதுமக்கள் - வணிகர்கள் பாதிப்பு
கால்வாய் கட்டுமான பணி தாமதம்; பொதுமக்கள் - வணிகர்கள் பாதிப்பு
கால்வாய் கட்டுமான பணி தாமதம்; பொதுமக்கள் - வணிகர்கள் பாதிப்பு
ADDED : ஜன 21, 2025 11:54 PM

பல்லடம்; கழிவு நீர் கால்வாய் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியால், வருவாய் பாதிக்கப்பட்டு வருவதாக, அருள்புரம் பகுதி கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்புரம் - -உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில், கழிவுநீர் கால்வாய் கட்ட குழி தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக, கடை உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து கடை உரிமையாளர்கள் கூறியதாவது:
அருள்புரம்- - உப்பிலிபாளையம் ரோட்டில், ஏராளமான குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் இருப்பதால், எந்நேரமும் வாகன போக்கு வரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். நெரிசலான இப்பகுதியில், அவசியமே இல்லாமல் கழிவு நீர் கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், கால்வாய் அமைக்க குழி தோண்டப்பட்டது. இப்பகுதியில் அதிகப்படியான பாறைகள் இருப்பதால் குழி தோண்ட முடியாமல், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
குழியை தாண்டி, கடைகளுக்கு செல்ல தற்காலிகமாக பலகை அமைத்துள்ளோம். இருப்பினும், பணியை முடிக்காமல், குழியையும் மூடாமல் கிடப்பில் போட்டதால், கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களில் விவாதித்தும், பல்வேறு புகார் மனுக்கள் அளித்தும் கோரிக்கை வைத்தோம். புகாரைத் தொடர்ந்து, குழி தோண்டிவிட்டு மீண்டும் கிடப்பில் போடுவதுமாக உள்ளனர்.
கால்வாய் கட்டுமான பணியை திட்டமிடாமல் மேற்கொண்டதால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.