/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையில் தென்படும் கானல் நீர்; 'சதம்' அடிக்க தயாராகும் வெயில்
/
சாலையில் தென்படும் கானல் நீர்; 'சதம்' அடிக்க தயாராகும் வெயில்
சாலையில் தென்படும் கானல் நீர்; 'சதம்' அடிக்க தயாராகும் வெயில்
சாலையில் தென்படும் கானல் நீர்; 'சதம்' அடிக்க தயாராகும் வெயில்
ADDED : செப் 20, 2024 05:52 AM

திருப்பூர் : 'தென் மேற்கு பருவமழையில், 36 சதவீதம் கூடுதலாக பெய்தும், பல மாவட்டங்களில் வறட்சி தலை துாக்க துவங்கியிருக்கிறது' என்ற தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதற்கு காரணம், வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது என்பது தான். தமிழகத்தில், கடந்த ஏப்., 14ல் துவங்கிய கோடை வெப்பம், இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது; நீண்ட கோடையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம் என்பதே யதார்த்தம் என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள்.
திருப்பூரை பொறுத்தவரை ஏற்கனவே, வெயிலின் தாக்கம் அதிகம் என்ற நிலையில் தென்மேற்கு பருவமழை ஓய்ந்த நிலையில், வெயிலின் சுடுதலும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்சியஸ் முதல், 37 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது. (அதாவது, 96.8 டிகிரி பாரன்ஹீட் முதல், 98.6 டிகிரி பாரன்ஹீட் வரை) என்கிறது, வானிலை மையம்.
பொதுவாக ஏப்., மே மாதங்களில் நிலவும் வெயிலின் தாக்கம், சாலையில் பயணிக்கும் போது கானல் நீராக தென்படும். தற்போது, திருப்பூர் நகர சாலைகளில் கானல் நீர் தென்படுவது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது, கோடை அல்ல என்ற போதிலும், வெயிலின் சுடுதல் அதிகம் தென்படுவது, மக்களை அச்சப்பட வைத்திருக்கிறது.