/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'எளிய ஆலோசனை; எட்டாது புற்றுநோய்!'
/
'எளிய ஆலோசனை; எட்டாது புற்றுநோய்!'
ADDED : பிப் 15, 2025 07:11 AM

உயிர் கொல்லி நோயாக உருவெடுக்கும் புற்றுநோயை அண்ட விடாமல் தடுக்க, எளிமையான வழிமுறைகளை சொல்கிறார், திருப்பூர் இந்தியன் கேன்சர் சென்டர் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ் குமார் கூறியதாவது;
இதுகுறித்து, அவர் கூறியதாவது:புற்றுநோய் பாதிப்பை தடுக்க, சில யோசனைகளை மக்கள் ஏற்க வேண்டும். அனைத்து வகையான புகையிலையும், புற்றுநோய்க்கு வழி வகுக்கும் என்பதால், புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். உடல் பருமன் என்பது, புற்றுநோய் ஏற்படுவதற்கு, 30 சதவீதம் காரணமாக இருந்து விடுகிறது. எனவே, உடல் பருமன் தவிர்க்க கூடிய, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி, அதன் மூலம் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். சூரிய ஒளியில் இருந்து உடலை தற்காத்துக் கொள்ளும் போது, தோல் புற்றுநோயை தவிர்க்க முடியும்.சில புற்றுநோய், வைரஸ் தொற்றுகளுடன் தொடர்புடையது; அவற்றை தடுப்பூசிகள் மூலம் தடுக்க முடியும். ஆரம்ப நிலையிலேயே நோய் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்வது, புற்றுநோயை குணப்படுத்தும்.
வழக்கமான பரிசோதனை மற்றும் சுய பரிசோதனை வாயிலாக, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை கண்டறிய முடியும். இது, ஆரம்ப நிலையிலேயே நோயை கட்டுப்படுத்த, பின், தடுக்க உதவும்.
இவ்வாறு, அவர் கூறினார்.