/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புற்றுநோய் பரிசோதனை முகாம்: கலெக்டர் ஆய்வு
/
புற்றுநோய் பரிசோதனை முகாம்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 10, 2025 11:16 PM
பல்லடம்:
காரணம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த புற்றுநோய் கண்டறியும் முகாமை, கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
அதன்பின், அவர் கூறியதாவது:
சுகாதாரத்துறை சார்பில், புற்றுநோய் கண்டறியும் திட்டம், காங்கயம் துணை சுகாதார நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டது. புற்றுநோய் பரிசோதனை, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 17 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இதில், 30 வயதுக்கு உட்பட்ட, 6.92 லட்சம் பேர் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய், 18 வயதுக்கு மேற்பட்ட, 20.03 லட்சம் பேர் வாய் புற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பயனடைந்துள்ளனர்.
பரிசோதனை மேற்கொண்ட பலர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.