வேட்பாளர் செலவு கணக்கு ஆய்வு:பொதுமக்களும் பங்கேற்கலாம்
வேட்பாளர் செலவு கணக்கு ஆய்வு:பொதுமக்களும் பங்கேற்கலாம்
ADDED : ஏப் 15, 2026 11:34 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: வேட்பாளரின் தேர்தல் செலவின கணக்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவப்பிரகாஷ் அறிக்கை:
திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கான செலவின பார்வையாளர் பங்கர் தலைமையில், வேட்பாளர்களின் செலவு கணக்கு ஆய்வு கூட்டம் 16ம் தேதி (இன்று) நடைபெறுகிறது. திருப்பூர் - அவிநாசி ரோட்டில், வேலம்பாளையத்திலுள்ள மாநகராட்சியின் முதல் மண்டல அலுவலகத்தில், காலை, 11:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடைபெறும்.
இதில், செலவின கணக்கு தணிக்கை குழு அலுவலர்கள், வேட்பாளருக்கான செலவு குறித்த கணக்குகளை தணிக்கை செய்ய உள்ளனர். இந்த ஆய்வு கூட்டத்தில், வேட்பாளர், அவர்களது பிரதிநிதிகள் மட்டுமின்றி பொதுமக்கள் யார்வேண்டுமானாலும் பங்கேற்று, கருத்துக்களை தெரிவிக்கலாம்.
--
