ADDED : டிச 01, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே பீஹாரை சேர்ந்த சர்வன்குமார், 28 என்பவரிடம் வடக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஒரு கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்து, கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.
பல்வேறு பகுதிகளில் மாநகர போலீசார் ரோந்து மேற்கொண்டனர். 'டாஸ்மாக்' பார் அருகே பெட்டி கடை உள்ளிட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தொடர்பாக செல்வபதி, 42, பாலமுருகன், 21, ஜேசுராஜ், 44 மற்றும் சேகர், 50 என, நான்கு பேரை போலீசார் கைது செய்து, 112 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

