தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவரை குறிவைத்து கஞ்சா விற்பனை

 மாணவரை குறிவைத்து கஞ்சா விற்பனை

 மாணவரை குறிவைத்து கஞ்சா விற்பனை


ADDED : பிப் 12, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை குடியிருப்பில், 20 கிலோ கஞ்சா பதுக்கிய விவகாரம், மாணவர்களை குறிவைத்து கடந்த ஆறு மாதங்களாக கஞ்சா விற்பனை நடந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.

திருப்பூர் அய்யம்பாளையம் நால் ரோட்டில், வீரபாண்டி போலீசார், கடந்த 9ம் தேதி இரவு வாகன தணிக்கையின்போது ஒரு காரை சோதனை செய்தனர். காரில், 16 கிலோ கஞ்சா இருந்தது. காரை ஓட்டி வந்த செவிலியர் மகன் சஞ்சய், 22; வீரபாண்டியை சேர்ந்த உணவு டெலிவரி வேலை செய்யும் விஷால், 19 என்பவரை கைது செய்தனர். சஞ்சய் தனது தாய், தம்பியுடன் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உள்ள குடியிருப்பில் இருப்பது தெரிந்தது.

பின், வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 4 கிலோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் நண்பர்கள் உதயநிதி, 20, ஆகாஷ், 23, ஜனார்த்தனன், 19 ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்துள்ளது. தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் கூறியதாவது: சஞ்சய், விஷால், மதன் ஆகியோர் திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு சென்று கடந்த, ஆறு மாதங்களாக கஞ்சா வாங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். வீட்டில் சந்தேகம் வராமல் ரகசியமாக இதை செய்து வந்தனர்.

திருநெல்வேலியில் உள்ள ரீகான் என்பவர் வாயிலாக பொட்டலங்களை காரில் கடத்தி வந்து, சந்தேகம் வராமல், மருத்துவமனை குடியிருப்பில் பதுக்கி வைத்துள்ளனர். அங்கு சென்று, 20 முதல், 30 கிலோ வரை வாங்கி வருகின்றனர். விற்று முடித்த பின், மீண்டும் சென்று வாங்கி வந்தனர். ஆந்திராவில் இருந்து பாளையங்கோட்டைக்கு பார்சல் வாயிலாக வருவது தெரிந்தது.

கஞ்சா பொட்டலங்களை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து, கடந்த ஆறு மாதமாக விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. மதன், ரீகான் போன்றவர்களை கைது செய்யப்படும் போது, மேலும் விபரங்கள் தெரிய வரும். இதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளார்கள் குறித்து ரகசிய விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us