ADDED : ஜன 22, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; கொடுவாய் பஸ் ஸ்டாப் அருகே கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது.
மேலும் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடைவீதியில் வணிகம் செய்யும் வியாபாரிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது மக்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் என பலரும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். கொசுக்களும் பதம் பார்ப்பதால் அங்கு நிற்கவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.