தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறன் வளர்ப்பு நிகழ்ச்சி; சி.ஐ.ஐ., 'புதிய பயணம்'

திறன் வளர்ப்பு நிகழ்ச்சி; சி.ஐ.ஐ., 'புதிய பயணம்'

திறன் வளர்ப்பு நிகழ்ச்சி; சி.ஐ.ஐ., 'புதிய பயணம்'


ADDED : நவ 08, 2024 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்; இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில், 'புதிய பயணம்; வளர்ச்சியை நோக்கி' என்கிற தலைப்பில், தொழில்முனைவோருக்கான திறன் வளர்ப்பு நிகழ்ச்சி துவக்க விழா, கிட்ஸ் கிளப் பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமைவகித்தார்.

சி.ஐ.ஐ., மாவட்ட தலைவர் இளங்கோ, துணைத் தலைவர் மனோஜ்குமார், கிட்ஸ் கிளப் குழும தலைவர் மோகன் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், 'திருப்பூரில் தனிமனிதன் ஒவ்வொருவரும் தொழில்முனைவோர் என்கின்ற உணர்வை வெளிப்படுத்துகின்றனர். திறன் வளர்ப்பு திட்டம், புதிய தொழில்முனைவோரின் திறமைகளை செம்மைப்படுத்த துணைநிற்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்சூழலை வளர்ப்பதன்மூலம், திருப்பூருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது', என்றார்.

மோகன் கார்த்திக் பேசுகையில், 'சி.ஐ.ஐ.,ன் புதிய பயணத்திட்டம், உள்ளூர் தொழில்முனைவோருக்கு தேவையான அறிவு, தொடர்புகள் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், நிலையான வளர்ச்சிக்கும் கைகொடுக்கும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us