/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2.4 டன் ரேஷன் அரிசி கடத்தல் கார் பறிமுதல்; ஒருவர் கைது
/
2.4 டன் ரேஷன் அரிசி கடத்தல் கார் பறிமுதல்; ஒருவர் கைது
2.4 டன் ரேஷன் அரிசி கடத்தல் கார் பறிமுதல்; ஒருவர் கைது
2.4 டன் ரேஷன் அரிசி கடத்தல் கார் பறிமுதல்; ஒருவர் கைது
ADDED : மே 30, 2025 01:32 AM
அவிநாசி, ; அவிநாசி பகுதியில், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வடமாநில தொழிலாளர்களுக்கும், கேரளாவிற்கும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா உத்தரவின் பேரில் எஸ்.பி. பாலாஜி சரவணன், டி.எஸ்.பி., ராஜபாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். பெரிய கருணைபாளையத்தில் காரில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜகுமார், எஸ்.ஐ.,பிரியதர்ஷினி உட்பட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி 2,400 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்தமொரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த துரையன், 53, என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவிநாசி வட்டாரத்திலுள்ள புதுப்பாளையம், வெங்கமேடு, சாமந்தன் கோட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வடமாநிலத்தவர்களுக்கும், கேரளாவுக்கும் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து துரையனை கைது செய்தனர். மேலும் 2,400 கிலோ அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

