sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பட்டப்பகலில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

/

பட்டப்பகலில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பட்டப்பகலில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பட்டப்பகலில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு


ADDED : டிச 11, 2025 06:35 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே, பட்டப்பகலில் சாலையில் சென்ற காரில் தீப்-பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஹாசிக் காதர், 30. இவரும், தாராபுரம் நான்கு சக்கர ஷோரூமில் பணிபுரியும் மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த காளிதாஸ், 30, என்-பவரும் ரெனால்ட் லோகன் காரில் நேற்று காலை, 10:45 மணிய-ளவில் கோவை நோக்கி சென்றனர். தாராபுரம் அடுத்த காதப்புள்-ளபட்டி டோல்கேட் அருகே சென்றபோது, காரில் இருந்த புகை வந்தது. அதிர்ச்சியடைந்த இருவரும், உடனடியாக காரை நிறுத்தி விட்டு, இறங்கினர்.சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து குபுகுபுவென எரிய ஆரம்பித்-தது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்-சியடைந்தனர். அவர்கள் கையில் இருந்த மொபைல்போனில், கார் எரிவதை வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்-டனர். இந்நிலையில், அங்கு சென்ற தாராபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில், கார் முற்றிலும் எரிந்து சேதமானது. குண்டடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us