ADDED : ஏப் 14, 2026 10:28 PM

அ நிறம் | அளவு
பல்லடம்:பல்லடத்தில் இருந்து கார் ஒன்று, உடுமலை நோக்கி சென்றது. மதியம், 2.30 மணிக்கு, சித்தம்பலம் அருகே, ரோட்டோரத்தில் பதிக்கப்பட்டிருந்த கல்லின் மீது மோதி, தொடர்ந்து, மின் கம்பம் மற்றும் உயர் அழுத்த டிரான்ஸ்பார்மர் மீதும் மோதியது. இதனால், காரின் முன்பக்க சக்கரம் முறிந்து, சிறிது துாரம் சென்ற பின்னரே கார் நின்றது. இந்த விபத்தில், டிரான்ஸ்பார்மரின் அடிப்பகுதி மற்றும் இதனுடன் இணைப்பில் இருந்த மின் கம்பத்தின் மேல் பகுதியும் முறிந்தது.
காரின் முன் பகுதி சேதமடைந்த நிலையில், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. காரில், கணவன் மனைவி மற்றும் குழந்தை என, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்ததாகவும், சிறு காயங்களுடன் தப்பித்ததாக பல்லடம் போலீசார் கூறினர்.
