ADDED : ஏப் 15, 2026 05:45 AM

அ நிறம் | அளவு
பல்லடம்: பல்லடத்தில் இருந்து கார் ஒன்று, நேற்று உடுமலை நோக்கி சென்றது. மதியம், 2.30 மணிக்கு, சித்தம்பலம் அருகே, ரோட்டோரத்தில் பதிக்கப்பட்டிருந்த கல்லின் மீது மோதி, தொடர்ந்து, மின் கம்பம் மற்றும் உயர் அழுத்த டிரான்ஸ்பார்மர் மீதும் மோதியது.
இந்த விபத்தில், டிரான்ஸ்பார்மரின் அடிப்பகுதி முறிந்தது. காரின் முன் பகுதி சேதமடைந்த நிலையில், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என பல்லடம் போலீசார் கூறினர்.
