/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டூவீலர் மீது மோதி நிற்காமல் 'பறந்த' கார் : துாய்மை பணியாளர் பலி; உறவினர்கள் மறியல்

ADDED : ஜூலை 14, 2025 11:55 PM
திருப்பூர்; தாராபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் துாய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார். காரை கண்டுபிடிக்க வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், பள்ள பட்டி ஏ.ஜி., நகரை சேர்ந்தவர் தங்கவேல், 52. நகராட்சியில் துாய்மை பணியாளர். இவரது மனைவி செல்வி, 40. இருவரும், டூவீலரில், தாராபுரம் அருகே உள்ள குமாரபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சின்ன மருதுார் - மூலனுார் ரோட்டில் சென்ற போது, அடையாளம் தெரியாத கார் டூவீலர் மீது மோதி விட்டு சென்றது. விபத்தில் படுகாயமடைந்த, இருவரும் நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய படி இருந்தனர்.
அதன்பின், ஆம்புலன்ஸில், இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி தங்கவேல் இறந்தார். செல்வி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூலனுார் போலீசார் விசாரித்தனர்.
விபத்து ஏற்படுத்தி சென்ற காரையும், அதில் சென்ற நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தாராபுரம் அரசு மருத்துவமனை முன் ரோட்டில் சாலை மறியலில் குடும்பத்தினர், உறவினர்கள் ஈடுபட்டனர்.
தாராபுரம் போலீசார் பேச்சு நடத்தினர். காரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய காரை, சேலத்தில் போலீசார் கண்டு பிடித்தனர்.