/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கார் தீயில் எரிந்து சேதம்; டிரைவர் தப்பினார்
/
கார் தீயில் எரிந்து சேதம்; டிரைவர் தப்பினார்
ADDED : நவ 26, 2025 06:56 AM

அவிநாசி: அவிநாசி அருகே ஓடும் காரில் ஏற்பட்ட தீயால், கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில், நேற்று கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்துக்கு சென்று அவிநாசி போலீசார்விசாரணை செய்தனர்.
அதில், ஈரோடு மாவட்டம், ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த கெமிக்கல் ஆலை உரிமையாளரான மலைச்சாமி 70, என்பவரின் கார் என்பது தெரிந்தது. மேலும் நேற்று கோவையிலிருந்து, மலைச்சாமியின் மகன் மிதுன்குமார், 39, என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
பழங்கரை அருகே வரும்போது காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனால், காரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தி விட்டு இறங்கி உள்ளார். அடுத்த சில நொடிகளில், கார் தீப்பிடித்து எரிந்து சேதமானது. அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

