
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முகாம் குடியிருப்பு அருகே காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ அணைக்கப்பட்டது.
திருப்பூர், சோளிபாளையத்தை சேர்ந்தவர் நிதிஷ்குமார், 35. நேற்று இரவு வேலையை முடித்து விட்டு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அவிநாசி ரோடு, குமார் நகரில் உள்ள கலெக்டர் அலுவலகம் முகாம் அலுவலகம் அருகே காரை நிறுத்தி விட்டு நண்பரை பார்க்க சென்றார். காரின் முன்பகுதியில் கரும்புகை வெளியேறிய நிலையில், திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. வடக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.