/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் விரைவில் இருதய சிகிச்சை மையம்'
/
'மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் விரைவில் இருதய சிகிச்சை மையம்'
'மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் விரைவில் இருதய சிகிச்சை மையம்'
'மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் விரைவில் இருதய சிகிச்சை மையம்'
ADDED : ஆக 12, 2025 07:21 PM
-- நமது நிருபர் -
''திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், இருதய சிகிச்சை மையம் விரைவில் அமைக்கப்படும்'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஏழை, எளிய மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும், சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனர். இவற்றிற்கு அரசும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
இந்நிலையில்,திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் 48.68 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மருத்துவமனையில் நடந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கினார்.
அமைச்சர் கூறியதாவது:
வேலம்பாளையம் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்ட நாள் முதலே, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் அங்கேரிபாளையம், டி.ஆர்.பி., நகர், அவிநாசி தொகுதியில், 26 படுக்கை வசதி கொண்ட ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டடம், குன்னத்துார், ஆதியூர், பள்ளபாளையம், சென்னி பாளையம், உடுமலை தொகுதியில் சாவடிபாளையம், குடிமங்கலம், கணியூர் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இருதய நோய்க்கான சிகிச்சை மையம் விரைவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.