ADDED : மார் 31, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மற்றும் அறக்கட்டளை, சென்ட்ரல் லயன்ஸ் மைக்ரோ லேப், ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை சார்பில், 'நடமாடும் இதயம் காப்போம் பஸ்' மூலம், இலவச இருதய பரிசோதனை முகாம், 15 வேலம்பாளையம் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் சண்முகம், செயலாளர் ராமச்சந்திரன் முகாமை துவக்கி வைத்தனர். முகாமில், 88 பேர் பங்கேற்றனர். 15 வேலம்பாளையம், ஸ்ரீசுவாதி பிரின்டர்ஸ் உரிமையாளர் ஸ்ரீசீனிவாசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.