/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில் பழகுனர் சேர்க்கை; நாளை ஈரோட்டில் முகாம்
/
தொழில் பழகுனர் சேர்க்கை; நாளை ஈரோட்டில் முகாம்
ADDED : பிப் 17, 2025 11:35 PM
திருப்பூர்; தேசிய தொழில் பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தில், ஈரோடு அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், நாளை காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்க உள்ளது.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் அதிகமான காலியிடங்களை நிரப்ப உள்ளன.
தேர்வாகும் நபர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளித்து, மத்திய அரசின் தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் பெற்றவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்; வெளிநாட்டு நிறுவனங்களிலும் முன்னுரிமை கிடைக்கிறது.
தொழில் பழகுனருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை, தொழில்பிரிவுகளுக்கு ஏற்ப, 8,000 ரூபாய் முதல் கிடைக்கும். திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள், எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை படித்த தகுதியானவர்கள், அசல் சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை, 0421 2230500 என்ற எண்களில் அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

